உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பாலஸ்தீனத்தில் அத்துமீறிய குடியேற்றத்தில் தொடர்ந்தும் ஈடுபடும் இஸ்ரேல்!

உலக செய்திகள் 6 நாட்கள் முன்
43 பார்வைகள்

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன மேற்குக் கரையின் ஜெனின் நகருக்கு அருகில் உள்ள ‘கனிம்’ என்ற பழைய யூத குடியேற்றப் பகுதியை இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக மீண்டும் திறந்து வைத்தனர்.

கடந்த 2005-ம் ஆண்டு விலக்கிக்கொள்ளப்பட்ட இந்த குடியேற்றத்திட்டம், தற்போது மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய குடியேற்றத்தை அமைக்கும் பணிகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும், அந்தப் பகுதியில் இருந்த பாலஸ்தீனியர்களின் வியாபாரத்தளங்களையும் சொத்துகளையும் இஸ்ரேலிய இராணுவம் தகர்த்துள்ளது.

இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறைச் செயல்கள் இஸ்ரேலுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் “செலவை ஏற்படுத்துகிறது” என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் முன்னர் குறிப்பிட்டிருந்தாலும், இஸ்ரேலிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆதரவுடன் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

76 0 0