உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பொதுநல மீன் வளர்ப்பு திட்டத்தை ஆரம்பிக்க ஆளுநரின் கருத்தையும் மீறி முட்டுக்கட்டை?

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
47 பார்வைகள்

மக்களுக்கு நன்மை பயக்கும் பொதுநல மீன் வளர்ப்பு திட்டத்தை சிலர் தமது தனிப்பட்ட பிரச்சினையால் எதிர்ப்பதாகவும், அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஊர்காவற்துறை – பருத்தியடைப்பு கிராமமானது வளர்ச்சியுறும் என அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அந்த திட்டம் தொடர்பான கூட்டமானது நேற்றையதினம் ஊர்காவற்துறை பிரதேச செயலர் தலைமையில், பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர், நக்டா நிறுவனத்தினர், சுற்றுச்சூழல் அதிகாரசபையினர், நீரியல் வள திணைக்களத்தினர், ஊர்காவற்துறை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர், பருத்தியடைப்பு மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இருப்பினும் நேற்றைய கூட்டத்திலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை.

இது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
பொதுநல மீன்வளர்ப்பு திட்டம் தொடர்பான பிரச்சினை இரண்டரை வருட காலமாக இடம்பெறுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவு இதுவரைக்கும் எடுக்கப்படவில்லை. இதுவரைக்கும் 15 கூட்டங்கள் இது குறித்து இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு ஆளுநரின் பங்கேற்புடனும் இது தொடர்பான கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஆளுநர், இந்த திட்டம் தொடர்பான விளக்கத்தை சரியான விதத்தில் மக்களிடம் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் திணைக்களங்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் இதுவரை எமது கிராமத்தில் இந்த திட்டம் குறித்து மக்களுக்கு விளக்கமளிப்பது தொடர்பான கூட்டம் இடம்பெறவில்லை.

2024 6ஆம் மாதம் மீன்களை கடலிலேயே வளர்ப்பது தொடர்பான சுற்றுநிருபம் எமக்கு கிடைக்கப்பெற்றது. தற்போது அதனை மாற்றி தரையில் மீன்களை வளர்க்க திட்டமிடப்பட்டது. தற்போது பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எதிர்வரும் 27ஆம் திகதி பொதுக்கூட்டம் ஒன்றினை எமது ஊரில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த கூட்டத்தினை ஒன்றரை வருடத்திற்கு முன்னரே நடாத்தி இந்த திட்டத்தினை ஆரம்பித்திருக்கலாம். இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டம் என எமது சங்கத்தினர் கருதுகின்றோம்.

இந்தத் திட்டத்தினை செய்வதால் எமது ஊரில் வீதி அமைக்கப்படும், மின்சார வசதி கிடைக்கும், கட்டட வசதிகள் கிடைக்கின்றன. 200 வருடங்களாக காடாக இருக்கின்ற இடத்தையே நாங்கள் கேட்கின்றோம். தங்களுக்குள் இருக்கின்ற முரண்பாட்டினாலேயே இந்த திட்டத்தினை தடுக்கின்றனர். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எனது ஊரில் முன்னேற்றம் ஏற்படும்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி 211 பொதுமக்கள் கையொப்பமிட்ட கடிதத்தை கடற்றொழில் சங்கத்துக்கு வழங்கினோம். அவர்கள் அதனை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த திட்டத்தினை செய்பவருக்கு கடிதம் கொடுத்து திட்டத்தை மேற்கொள்ளுமாறு கூறினர். திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சிறிது காலத்தில் தனிநபர் ஒருவரால் அது தடுக்கப்பட்டது.

எமது கிராமத்துக்கு அருகேயுள்ள தம்பாட்டி கிராமத்தில் 2 நண்டு பதனிடும் கம்பனிகள் உள்ளன. அதில் பல பெண்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது. அதுபோல இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் எமது கிராமத்தில் உள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எனவே இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அத்துடன் அதிகாரிகள் இது குறித்து சரியான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0