உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

அமெரிக்கச் சிறைச்சாலையில் மின்னல் தாக்கி 16 கைதிகள் காயம்!

உலக செய்திகள் 1 வாரம் முன்
109 பார்வைகள்

அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் நிலவும் கடும் சீரற்ற வானிலைக்கு மத்தியில், அங்குள்ள சிறைச்சாலை ஒன்றில் மின்னல் தாக்கியதில் 16 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இரவு உணவுக்குப் பிறகு சிறை வளாகத்தில் உள்ள கட்டடங்களுக்கு இடையே கைதிகள் சென்று கொண்டிருந்தபோதே அனர்த்தம் நேர்ந்துள்ளது.

காயமடைந்தவர்களில் ஒருவர் உடனடியாக உலங்குவானூர்தி மூலம் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சிகிச்சை பெற்ற 9 கைதிகள் மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ள நிலையில் பலத்த காயமடைந்த ஒருவர் உட்பட 7 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஒஹாயோ புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் சிறைச்சாலை பணியாளர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

ஒஹாயோ, இந்தியானா மற்றும் இலினாய்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் மத்திய மேற்கு பிராந்தியங்களில் சூறாவளி, பலத்த காற்று மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சீரற்ற வானிலை காரணமாக இதுவரை குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0