உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
93 பார்வைகள்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் நாளை (13.08.2026) வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் (14.08.2026) வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் தொல்லியல் ஆய்வுத்தளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இக் கண்காட்சியில் நமது முன்னோர் பயன்படுத்திய அரிதான பொருட்கள், பண்டைய பண்பாட்டு எச்சங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் பலவும் இடம்பெறவுள்ளன.

இக் கண்காட்சியில் ஈழத்தின் பண்டைய வரலாற்றினையும் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தின் தொன்மைச் சிறப்பையும் சான்றுகளுடன் மக்கள் நேரில் கண்டு உணர்ந்துகொள்ள முடியும்.

பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தமது வரலாற்று மற்றும் தொல்லியல் அறிவை மேம்படுத்திக்கொள்ள இதுவொரு சிறந்த வாய்ப்பாகும்.

எனவே மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் குறிப்பிட்ட இரு தினங்களிலும் வருகை தந்து இக் கண்காட்சியைப் பார்வையிட்டு நமது பண்டைய வரலாற்று சிறப்புகளை அறிந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர் .

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

61 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

69 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

76 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

58 0 0