உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

செம்மணிப் புதைகுழி பேரவலம்; 500 ஐக் கடந்த மனித எலும்புக்கூடுகள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
126 பார்வைகள்

இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியான யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகள் நேற்றுடன் 100 நாட்களை எட்டியுள்ளதுடன், இதுவரை மொத்தம் 507 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 46ஆம் நாள் அகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.

நேற்றைய அகழ்வின் போது புதிதாக 8 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 7 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியிலிருந்து இதுவரை கண்டறியப்பட்ட 507 மனித என்புத் தொகுதிகளில், 501 தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய அகழ்வின்போது, சிறுமி ஒருவரின் என்புத் தொகுதியில் இரு பக்கங்களிலிருந்தும் இரு காப்புகளும், ஊசி ஒன்றும் சான்றுப்பொருட்களாக மீட்கப்பட்டு நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய அகழ்வின்போதும் என்பு எச்சங்கள் குவியல்களாகவே மீட்கப்பட்டன. இதன் மூலம் இதுவரையான காலப்பகுதியில் குவியல்களாக எடுக்கப்பட்ட என்பு எச்சங்களின் எண்ணிக்கை 40 ஆகும்.

இதனிடையே, செம்மணிப் புதைகுழியில் எழுமாறாகத் தோண்டப்பட்ட இரு குழிகளில் முதலாவது குழியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் அடுத்தகட்ட அகழ்வுப் பணிகள் குறித்து நிபுணர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 100 நாட்கள் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு.!

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட விசேட நிர்வாக சபையின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் நேற்று திங்கட்கிழமை (05) முறைப்படி…

54 0 0
இலங்கை செய்திகள்

கிரிஷ் வழக்கு; நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கிரிஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி…

60 0 0
இலங்கை செய்திகள்

முக்கிய போ*தைப்பொருள் கடத்தல்காரர் கைது.!

அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, அம்பாறையின் நவகம்புர – தயாபுர கிராமத்தில் வைத்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்…

42 0 0
இலங்கை செய்திகள்

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டு விழாவை முன்னிட்டு பிரார்த்தனை நிகழ்வு.!

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கும் ஆசி வேண்டி கொழும்புப்பிட்டி (கொள்ளுப்பிட்டி) ஜும்மாப் பள்ளிவாசலில் விசேட ‘கிராத்’ (திருக்குர்ஆன்…

68 0 0