உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

திராய்க்கேணி படுகொ*லையின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
122 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ்க் கிராமமான திராய்க்கேணியில் 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைகளின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் (06) மாலை அக்கிராமத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி திராய்க்கேணி கிராமத்தில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலில் 54 தமிழ் மக்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அக்கிராமத்து மக்களால் வருடாந்தம் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக, இம்முறையும் படுகொலை இடம்பெற்ற ஆலய முன்றலில் இந்நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது கிராம மக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தீபமேற்றி, சிறப்புப் பூஜைகள் வழிபாடுகளை மேற்கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்நினைவேந்தல் நிகழ்வில் சமூகச் செயற்பாட்டாளர்களான திரு. காந்தன், தாமோதரம் பிரதீவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

82 0 0