உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்திய சாரதி கைது.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
68 பார்வைகள்

அம்பாறை பகுதியில் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் நேரடியாக மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனையின் போது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்துத் தர்க்கத்தில் ஈடுபட்ட டிப்பர் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் ‘ஐஸ்’ போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமையும் மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் பணிப்புரைக்கு அமைவாக, அம்பாறை தலைமையகப் பொலிஸாரினால் அம்பாறை நகரில் விசேட போக்குவரத்துச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நடவடிக்கையை நேரில் பார்வையிட்டு கண்காணிப்பதற்காகப் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் கொண்டுவட்டுவன குளம் அருகிலுள்ள சோதனைச் சாவடிக்கு விஜயம் செய்தார்.

இதன்போது, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சிறிய வாகனங்கள் மட்டுமே சோதனையிடப்படுவதை அவதானித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர், பாரிய ரக வாகனங்களையும் உடனடியாகச் சோதனையிடுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவ்வழியாக வந்த டிப்பர் வாகனம் ஒன்று பொலிஸாரால் நிறுத்தப்பட்டது. இருப்பினும், அதன் சாரதி வாகனத்திலிருந்து இறங்காமல் ஆவணங்களை மட்டும் பொலிஸாரிடம் வழங்கியுள்ளார். சட்டமீறல் தொடர்பில் அபாரதப் பத்திரம் வழங்க பொலிஸார் முற்பட்டபோது, சாரதி வாகனத்தை விட்டு இறங்கி பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலையிட்டு, பொலிஸாரிடம் தேவையற்ற தர்க்கங்களில் ஈடுபடாமல் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் காப்பீட்டுப் பத்திரங்களை வழங்குமாறு அறிவுறுத்திய போதிலும், சாரதி பிரதிப் பொலிஸ்மா அதிபருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் குறித்த சாரதி உடனடியாகக் கைது செய்யப்பட்டு அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சந்தேகநபரின் சீரற்ற நடத்தையை அடுத்து, அவர் அம்பாறை பொது மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளமை உறுதியானது.

அம்பாறை நவகம்புர பகுதியைச் சேர்ந்த குறித்த டிப்பர் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அவருக்கு எதிராக 4 தாக்குதல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையும், மேலும் ஒரு தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அம்பாறை தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் உபுல் இந்திரஜித் குணவர்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0