உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

செம்மணியில் 500 ஐ நெருங்கிய எலும்புக்கூடுகள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
69 பார்வைகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று (மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 45ஆவது நாள் அகழ்வில்) புதிதாக 8 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 499 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து, இதுவரை மொத்தம் 494 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்றைய அகழ்வின் போது சிறுவர் ஆடை ஒன்றின் பொத்தான் மற்றும் மூன்று நாணயக் குற்றிகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் அடையாளம் காணப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, செம்மணிப் புதைகுழியில் ஜி.பி.ஆர். ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் எழுமாறாகக் குழிகளைத் தோண்டி ஆய்வு செய்யும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நேற்று இரண்டு இடங்களில் முன்னெடுக்கப்பட்டன. இந்தக் குழிகளில் மனித என்புகள் அல்லது தடயப் பொருட்கள் ஏதேனும் அடையாளம் காணப்பட்டால், அடுத்த கட்டத் தொடர் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்படும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிரிஷ் வழக்கு; நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கிரிஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி…

60 0 0
இலங்கை செய்திகள்

முக்கிய போ*தைப்பொருள் கடத்தல்காரர் கைது.!

அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, அம்பாறையின் நவகம்புர – தயாபுர கிராமத்தில் வைத்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்…

42 0 0
இலங்கை செய்திகள்

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டு விழாவை முன்னிட்டு பிரார்த்தனை நிகழ்வு.!

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கும் ஆசி வேண்டி கொழும்புப்பிட்டி (கொள்ளுப்பிட்டி) ஜும்மாப் பள்ளிவாசலில் விசேட ‘கிராத்’ (திருக்குர்ஆன்…

68 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

67 0 0