பாலஸ்தீன நிலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த தாவரங்களை அளிக்கும் இஸ்ரேல்!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் பகுதியில் உள்ள பல நகரங்களின் நிலங்களைக் குறிவைத்து இஸ்ரேலிய இராணுவப் படைகள் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.
இதில் மார்கா நகரில் உள்ள மரங்களைப் அகற்றுவதும்,பல நிலங்களைக் கையகப்படுத்துவதும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிவ் மரங்கள் அறுவடைக்குத் தாயாராகிக் கொண்டிருந்த வேளையில் அவை புல்டோசர் இயந்திரங்கள் மூலம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
மொத்தம் 311 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலங்களில் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்களை அகற்றுமாறு இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டுள்ளதாக பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த உத்தரவு, யஅபத், அராபா, அன்ஸா மற்றும் அஜ்ஜா ஆகிய நகரங்களைப் பாதிக்கும்.
ஜெனின் ஆளுநரகத்தின் நிலங்களைக் குறிவைத்து தீவிரப்படுத்தப்பட்டு வரும் இஸ்ரேலிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தப் புதிய உத்தரவுகள் அமைந்துள்ளன.
விவசாய நிலங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி விவசாயிகளின் சொத்துக்களுக்கு இஸ்ரேல் சேதம்; விளைவிப்பதாகவும் வாஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


