உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பேச்சுரிமையை முடக்குவதாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
87 பார்வைகள்

பேச்சுரிமையைப் பாதுகாப்பதாகக் கூறி பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், அதற்கு மாறாக மக்களின் பேச்சுரிமையைப் பறிக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாக அமெரிக்க நீதிமன்றங்களின் தொடர் தீர்ப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.

ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றது முதல், முதலாம் அரசியலமைப்புத் திருத்த உரிமைகளான பேச்சுரிமை, மத சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை அவரது நிர்வாகம் மீறியதாக 75 கூட்டாட்சி நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன.

பல்கலைக்கழகங்களுக்கான நிதியுதவி இரத்து, சட்ட நிறுவனங்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மீதான கெடுபிடிகள் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகளிலேயே இந்தத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் பெரும்பாலான தீர்ப்புகள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதிகளால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளால் வழங்கப்பட்டவை என்றாலும், குடியரசுக் கட்சியினரால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளும் 10 வழக்குகளில் ட்ரம்ப் அரசுக்கு எதிராகவே தீர்ப்பளித்துள்ளனர்.

எனினும், நீதிமன்றங்களின் இந்தத் தீர்ப்புகளை “அரசியல் செயல்பாடுடையவை” என விமர்சித்துள்ள வெள்ளை மாளிகை, தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்துவருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

140 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0