உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மியன்மாருடன் மீண்டும் பேச்சுவார்த்தை : தாய்லாந்து பிரதமர் வலியுறுத்தல்!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
67 பார்வைகள்

மியன்மாருடன் “கணக்கிடப்பட்ட மறுகட்ட பேச்சுவார்த்தை” அவசியமானது என தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்ன்விரகுல் வலியுறுத்தியுள்ளார்.

பிராந்திய அமைதியை நிலைநாட்டவும், மியன்மாரின் தற்போதைய கள நிலவரத்தைக் கருத்தில் கொண்டு உதவிகளை வழங்கவும் பேச்சுவார்த்தைக் கதவுகள் திறந்திருக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியான் அமைப்பின் ‘ஐந்து அம்சக் கொள்கை’ வழிகாட்டுதலின் படியே இந்த அணுகுமுறை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மியன்மார் இராணுவ ஆட்சிக் குழுவின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மின் ஆங் லைங்கை, தாய்லாந்து பிரதமர் அனுதின் சந்திக்கவுள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

அதேவேளையில், மியன்மாரின் முன்னாள் தலைவி ஆங் சான் சூகி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதியைச் சந்தித்துப் பேசியதாகவும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவ ஆட்சியாளர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது அவர்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளித்துவிடும் என்று அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளபோதிலும், பிராந்திய ஒற்றுமையைப் பேண இந்த நெகிழ்வுத்தன்மை அவசியம் என தாய்லாந்து பிரதமர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0