உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஜப்பானை நோக்கி அதிவேகமாக நகரும் டொல்பின் சூறாவளி!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
76 பார்வைகள்

பசிபிக் பெருங்கடலில் உருவான ‘டொல்பின்’ தீவிர சூறாவளி ஜப்பானை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருவது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சூறாவளி மணித்தியாலத்திற்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடியதென ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, பொனின் தீவுகளை ஏற்கனவே கடந்துள்ள இந்த சூறாவளி, வார இறுதியில் ஒகினாவா தீவில் முழுமையாகக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஏற்படும் கடல் அலை சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக விமானம் மற்றும் படகுப் போக்குவரத்துகள் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அத்துடன், இந்த சூறாவளியின் தாக்கம் காரணமாக தாய்வானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், சீனா ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே மின் தடை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உள்ளூர் நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0