உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நஷ்டஈடு வழங்குதல் தொடர்பான கூட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
96 பார்வைகள்

பலாலி விமான நிலையம் விஸ்தரிப்பிற்கென மயிலிட்டி வடக்கு(J/246), தென்மயிலை(J/240), பலாலி மேற்கு(J/256), குரும்பசிட்டி(J/242) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 1986ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொது மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த காணி உரிமையாளர்களுக்கான நஷ்டஈட்டை வழங்கும் நோக்கில் காணி உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் இன்றையதினம்(04.08.2026) தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. சிவகெங்கா அவர்களின் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபனின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

குறித்த காணிகளுக்கான நஷ்டஈட்டை பெற்றுக் கொள்வதற்கு விலை மதிப்பீட்டு திணைக்களத்தின் விலை மதிப்பீட்டு அறிக்கையை பெற்றுக் கொள்வது அவசியமென்பதால் இதற்கான சம்மதம் தெரிவிக்கும் படிவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. காணி உரிமையாளர்களின் காணிகளின் பெறுமதியை மதிப்பீடு செய்வதற்காகவே ஆகும்.

தொடர்ந்து தமது காணிகளுக்கான நஷ்டஈட்டை பெற்றுக் கொள்வதற்கு சம்மதம் தெரிவித்த காணி உரிமையாளர்களிடம் விலை மதிப்பீட்டு திணைக்களத்தின் மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கு ஏதுவாக அவர்களது காணிகளை 2022ஆம் காலப்பகுதிக்கு உரியதாக மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் காணி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்ட படிவத்தின் ஆங்கில மொழி மூலமான படிவமும் தமிழ் மொழி மூலமான படிவமும் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த படிவத்தில் தீர்மானிக்கப்பட்ட மதிப்பீட்டினை நஷ்டஈடாக பெற்றுக்கொள்ள சம்மதிக்கிறேன் என்ற சொற்றொடர் தமக்கு குழப்பமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய காணி உரிமையாளர்கள், அதனை விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் விலை மதிப்பீட்டுக்கு உடன்படுகிறேன் என மாற்றுமாறு கோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்தனர்.

குறித்த விடயம் அமைச்சுக்கு உட்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய மாவட்ட அரசாங்க அதிபரால் இதனைத் திருத்தி அமைச்சுக்கு அனுப்பி அவர்களிடமிருந்து முடிவினை பெற்றுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டதுடன், அது தொடர்பான நடவடிக்கைகளுக்காக காணி உரிமையாளர்களை உள்ளடக்கிய வகையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டதுடன், தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிரிஷ் வழக்கு; நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கிரிஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி…

60 0 0
இலங்கை செய்திகள்

முக்கிய போ*தைப்பொருள் கடத்தல்காரர் கைது.!

அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, அம்பாறையின் நவகம்புர – தயாபுர கிராமத்தில் வைத்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்…

41 0 0
இலங்கை செய்திகள்

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டு விழாவை முன்னிட்டு பிரார்த்தனை நிகழ்வு.!

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கும் ஆசி வேண்டி கொழும்புப்பிட்டி (கொள்ளுப்பிட்டி) ஜும்மாப் பள்ளிவாசலில் விசேட ‘கிராத்’ (திருக்குர்ஆன்…

68 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

67 0 0