உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
129 பார்வைகள்

ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியதாக ட்ரம்ப் தனது ‘டிரூத்’ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோன்று வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் இருப்புக்காகவும், விரைவாக உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை ரத்து செய்ய தாம் சம்மதித்துள்ளேன் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது தொடர்பான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அமெரிக்கப் படைகள் முன்னெடுத்தால், அதற்கு தீர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

பல முக்கிய உட்கட்டமைப்புகள் மீது ஈரானினால் ஏவப்பட்ட ட்ரோன்களை அழித்துள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே, துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவூதி உயர் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி நடத்திய தனித்தனி தொலைபேசி உரையாடல்களின் போது இக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் ஈரான் தீர்க்கமாக பதிலளிக்கும் எனக் கூறிய அராக்சி, அமெரிக்காவின் பிராந்திய நிலைகுலைவு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளின் விளைவுகள் குறித்தும் விவாதித்ததாக அராக்சியின் டெலிகிராம் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0