உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான கட்டடத்தினை விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
96 பார்வைகள்

பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வெகுஜன ஊடக பிரதியமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன உறுதியளித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் கௌசல்யா யாழ்ப்பாண அஞ்சல் வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது யாழ். அஞ்சல் வளாகத்தில் வடமாகாண அஞ்சல் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் பொழுது இதனை கூறியுள்ளார்.

அங்கு சென்று யாழ்ப்பாண அஞ்சல் வளாகத்தினை பார்வையிட்டதுடன் வடமாண பிரதி அஞ்சல்மா அதிபர் அலுவலக கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டார். இதன் பொழுது வடமாகாண அஞ்சல் துறையின் தேவைப்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பருத்தித்துறை அஞ்சலக கட்டடம் விடுவிப்பு தொடர்பாக கூறப்பட்டது.

இதன்போது பதிலளித்த பிரதியமைச்சர்,
பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம் விடுவிப்பு தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் கரிசனை கொண்டுள்ளோம்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது தொடர்பாக விவாதித்து அதன்பின்பு எமது அரசாங்க உயர்மட்ட அபிவிருத்தி குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதன்பின்னர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

1971ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட பருத்தித்துறை அஞ்சல் அலுவலக கட்டடம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் செயற்பட முடியாமல் போனது அதன்பின்னர் இன்றுவரை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.

இதேவேளை நேற்றைய கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர், பிராந்திய கணக்காளர், வவுனியா அஞ்சல் அத்தியட்சகர், யாழ். தபால்நிலைய பிரதம தபாலதிபர், பருத்தித்துறை அஞ்சலதிபர் மற்றும் அஞ்சல் பயிற்சிக் கல்லூரியின் பிரதம போதனாசிரியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

75 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

66 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு.!

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட விசேட நிர்வாக சபையின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் நேற்று திங்கட்கிழமை (05) முறைப்படி…

68 0 0
இலங்கை செய்திகள்

கிரிஷ் வழக்கு; நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கிரிஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி…

67 0 0