உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் வயல்களை துவம்சம் செய்த காட்டு யானைகள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
133 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி பிரதேசத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில் காணப்பட்ட பல ஏக்கர் நெல் வயல்கள் காட்டு யானைகளின் தாக்குதலினால் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

இரவு வேளையில் காட்டுப்பகுதியிலிருந்து கிராமத்திற்குள் புகும் காட்டு யானைக் கூட்டங்கள், அறுவடைக்குத் தயாராகவுள்ள பயிர்ச் செய்கைகளுக்குள் புகுந்து நெற்பயிர்களை உட்கொண்டதுடன், அவற்றை மிதித்து நாசப்படுத்தியுள்ளதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

வங்கிக் கடன்களைப் பெற்றுப் பெரும் சிரமத்திற்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்செய்கைகள், அறுவடைக்குச் சில நாட்களே உள்ள நிலையில் இவ்வாறு நாசமாகியுள்ளமையினால் தம்மைப் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதாக விவசாய சமூகத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்பகுதியில் தொடர்ந்து அதிகரித்துவரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

84 0 0