உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சுதுமலை அம்மன் கோவில் வழக்கைத் தள்ளுபடி செய்து மேல் நீதிமன்றம் உத்தரவு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
156 பார்வைகள்

சுதுமலை அம்மன் கோவில் திருப்பணி வேலைகள் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதிகளின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டு ஐந்து தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இடைக்காலக் கட்டளை தொடர்பான விசாரணை, வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் நேற்றையதினம் (31.07.2026) வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர்கள் தமது மனுவில், அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானங்கள் உடனடியாக இடித்தழிக்கப்பட வேண்டுமென்றும், கோவில் திருப்பணிகள் தொடர்ந்து எதுவும் இடம்பெறக் கூடாதென இடைக்காலக் கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டுமென்றும் கோரியிருந்தனர்.

இவ்வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்னிலையாகியிருந்தார். நான்காம், ஐந்தாம், ஆறாம் எதிர்மனுதாரர்களான கோவில் அறங்காவலர் சபையின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் சார்பில் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் முன்னிலையாகியிருந்தார்.

விசாரணையின் போது எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன், கட்டுமான அனுமதி தொடர்பிலான வழக்குகளை விசாரிக்கும் நியாயாதிக்கம் நீதவான் நீதிமன்றம் வசமே உள்ளது என்றும், அதனை மேல் நீதிமன்றம் பிரயோகிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார். எது எவ்வாறாயினும், அனுமதியின்றிப் பெறப்பட்ட கட்டடங்கள் என்றாலும்கூட அவற்றை இடித்தளிக்குமாறு கட்டளையிடுவதற்கான நியாயாதிக்கம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை எனத் தெளிவுபடுத்தினார். மேலும், எழுத்தாணை மனு வழக்கொன்றில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கோ அல்லது இல்லாதொழிப்பதற்கோ விண்ணப்பிக்க முடியும் என்றும், ஆனால் இவ்வழக்கைப் பொறுத்தவரை பிரதேச சபையினால் இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாத நிலையில், மனுதாரரினால் செய்யப்பட்ட இவ்விண்ணப்பம் முன்முதிர்வானது என்றும் வாதிட்டார்.

எனவே, இடைக்காலக் கட்டளைகளை நிராகரிப்பது மட்டுமன்றி, எதிர்மனுதாரர்களுக்கு முறைசார் அறிவித்தல் அனுப்பப்பட வேண்டிய வழக்கொன்று மனுதாரர்களால் விண்ணப்பிக்கப்படவில்லை என்பதனையும் கருத்திற்கொண்டு;, வழக்கினை நீதிமன்றம் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனச் சட்டத்தரணி கு.குருபரன் வலுவான சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணங்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், மனுதாரர்களின் இடைக்காலக் கட்டளைக்கான விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், வழக்கையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து கட்டளையிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

75 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

66 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு.!

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட விசேட நிர்வாக சபையின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் நேற்று திங்கட்கிழமை (05) முறைப்படி…

68 0 0
இலங்கை செய்திகள்

கிரிஷ் வழக்கு; நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கிரிஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி…

67 0 0