இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பறிமுதல்.!
இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை பொலிஸார் நேற்று (31) பறிமுதல் செய்துடன் மூவரை கைது செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தவிருப்பதாக பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, புதுமடம் கடற்கரைப் பகுதியில் பொலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதன்போது, அந்தப் பகுதிக்கு வந்த சிறிய லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனா். அதில்146 மூட்டையில் 30 இலட்சம் இந்தியா ரூபாய் மதிப்பிலான 292 கிலோ கஞ்சா இருந்ததும், இவற்றை இலங்கைக்கு கடத்தவிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த பொலிஸார், அந்த லொறியில் பயணித்த இராமநாதபுரம் பெருங்குளத்தைச் சேர்ந்த செந்தில்வேலன், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், சேகா் ஆகிய மூவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.