உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்த வீடு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
164 பார்வைகள்

அம்பாறை இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (31) மாலை பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.

குடும்பத்தின் தந்தை கொழும்புக்குச் சென்றுள்ள நிலையில், தாய் அருகிலுள்ள தையல் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தின் போது வீட்டில் எவரும் இருக்கவில்லை எனப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

மழை பெய்யத் தொடங்கிய வேளையில் வீட்டிலிருந்த இரண்டு பிள்ளைகளும் அருகிலுள்ள வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மின்னல் தாக்கத்தால் வீட்டின் உள்ளே பரவிய தீயைப் பிரதேசவாசிகள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும், உபகரணங்களும் தீயில் எரிந்து சாம்பலாகின.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இகினியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

84 0 0