உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
94 பார்வைகள்

மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலுடன் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வலி வடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.

​இந்த சதி முயற்சியின் ஒரு கட்டமாக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நஷ்ட ஈடு வழங்குவதற்கான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, காணிகளை இழந்து தவிக்கும் மற்றும் எக்காலத்திலும் நஷ்ட ஈடு கோராத மக்களுக்கே பிரத்தியேகமாக கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

​இவ்வாறு அழைக்கப்படும் மக்களிடம் ஏதோ ஒரு வகையில் சம்மதத்தைப் பெற்று, அவர்களின் பூர்வீகக் காணிகளை நிரந்தரமாகக் கபளீகரம் செய்யவே இன்றைய அரசும் அதன் அதிகாரிகளும் தீவிரமாக முயற்சிக்கின்றனர் என்று அக்குழு எச்சரித்துள்ளது.

​இராணுவப் பிடிக்குள் இருக்கும் தமது சொந்த நிலங்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மக்கள் தொடர்ந்து 15 வாரங்களாகத் தொடர் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களின் இந்த நியாயமான போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் சதி வேலைகளிலேயே அரசு இறங்கியுள்ளது.

​எனினும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடினால் மட்டுமே எமது காணி நிலங்களை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் வலுவாக வலியுறுத்தியுள்ளனர்.

மக்களின் காணிகளைச் சுவீகரிக்கத் துடிக்கும் அரசின் கோரிக்கைக்கு இணங்க, குறித்த கலந்துரையாடல் தினத்திற்கு முன்னர் எந்த வகையான நஷ்ட ஈடு, எந்தக் காலப்பகுதிக்குள் வழங்கப்படும் என்பது குறித்த தெளிவான உத்தரவாதத்தை அரசு எழுத்து மூலம் வழங்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

அரசின் சூழ்ச்சி வலையில் சிக்கி, நஷ்ட ஈட்டிற்காக எமது பூர்வீக சொத்துக்களை இழந்துவிடாமல் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0