உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கெஷ்ம் தீவில் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா, விலை கொடுக்க வேண்டியிருக்கும் – ஈரானிய சபாநாயகர் எச்சரிக்கை!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
80 பார்வைகள்

கெஷ்ம் தீவில் இடம்பெற்ற மரணங்களுக்கு அமெரிக்கா, விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்துள்ளார்!

கெஷ்ம் தீவில் ஒரு தம்பதியினரும் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டமை, மற்றும் மினாப் மற்றும் லமெர்டில் நடந்த அட்டூழியங்களின் தொடர்ச்சிகளுக்காகவே ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

போரின் முதல் நாளில், தெற்கு ஈரானிய நகரமான மினாபில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 170 பேர் உயிரிழந்தனர்.

அதே நாளில், தென்மேற்கு ஈரானிய நகரமான லமெர்டில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கமும் தாக்கப்பட்டதில், குறைந்தது 24 பேர்  உயிரிழக்கப்பட்டனர்.

இந்தநிலையில், போர்க்களத்தில் தாங்கள் பெறும் தோல்விகளை ஈடுசெய்யும் விதமாக, அப்பாவி மக்கள் இரத்தம் சிந்துவதை அமெரிக்கா விரும்புவதாக காலிபாஃப் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, “அவர்கள் அதற்கான விலையைக் கொடுப்பார்கள்,” என்று அவர் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0