உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவில் நெதன்யாகு தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
152 பார்வைகள்

வொஷிங்டன் டி.சி.யில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரவு உணவருந்திக் கொண்டிருந்த விடுதிக்குள் திடீரென நுழைந்த பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள், அவருக்கு எதிராகத் தீவிர முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

இதன்போது, “பிபி, பிபி, உங்களால் மறைய முடியாது, நீங்கள் இனப்படுகொலை செய்கிறீர்கள்” என முழக்கமிட்டவாறு விடுதியின் உணவகப் பகுதிக்குள் நுழைந்த ஆர்வலர்கள், நெதன்யாகுவிற்கு தங்களது பலத்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள் மற்றும் காசா மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவிற்கு வருகை தந்துள்ள நெதன்யாகுவின் பயணத்தைக் கண்டிக்கும் வகையில் இந்த உடனடிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் தலையிட்டுப் போராட்டக்காரர்களை வெளியேற்றிய போதிலும், இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0