உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பு!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
131 பார்வைகள்

ஈரானிய நிறுவனங்கள் மீது தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் வணிகக் கப்பல்களிடம் கட்டாயக் காப்பீடு என்ற பெயரில் சட்டவிரோதப் பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இரு ஈரானிய நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு நிறுவனங்கள் மீதும் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது.

‘பெர்சியன் கல்ஃப் மேரின் இன்சூரன்ஸ் கம்பெனி’ மற்றும் ‘ஹோர்முஸ் சேஃப் மேரின் சர்வீசஸ் அத்தாரிட்டி’ ஆகிய இரு நிறுவனங்களுக்கே இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையின் பின்னணியில் இயங்கும் இந்த நிறுவனங்கள், ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் வணிகக் கப்பல்கள் கட்டாயக் கடல்சார் ‘காப்பீட்டை’ வாங்குமாறு நிர்பந்தித்து பணத்தைப் பறிக்கும் சட்டவிரோதத் திட்டத்தில் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

கப்பல்களைக் கைப்பற்றுதல் போன்ற பெரும்பாலான அபாயங்களை ஈரானே செயற்கையாக உருவாக்கிவிட்டு, அந்த அபாயங்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி வணிகக் கப்பல்களிடம் நிதியை திரட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் பெறப்படும் வருவாய், ஈரானிய ஆட்சியின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் ஊழல் செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுமட்டுமன்றி, தடைகளை மீறி ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோ இரசாயன பொருட்களை சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடத்திச் சென்ற ‘நிழற்படை’ கப்பல்களை இயக்கிய நிறுவனங்கள் மீதும் அமெரிக்க அரசு தடைகளை விதித்துள்ளது.

உலகின் மிக முக்கியமான கடல்வழி வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த ஈரான் முயன்று வரும் நிலையில், அங்கு சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை மீண்டும் உறுதி செய்வது சர்வதேச அளவில் பெரும் சவாலாக நீடித்து வருகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0