உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஜெர்மனியில் “Audi” கார் உற்பத்தித் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
69 பார்வைகள்

ஜெர்மனியின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ‘அவுடி’ (Audi),  நெக்கார்சல்ம் நகரில் உள்ள தனது தொழிற்சாலையை மூடக்கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று(29.07.2026) நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 6,000 தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

தொழிற்சாலையின் எதிர்காலம் குறித்து வோக்ஸ்வேகன் நிர்வாகம் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அவுடி நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘வோக்ஸ்வேகன்’, தொழில்துறையில் நிலவும் கடும் சவால்களைச் சமாளிக்க பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளைக் குறைக்கவும், செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது.

மாற்று வழிகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில், 2030-க்குப் பிறகு ஜெர்மனியில் மூடப்பட வாய்ப்புள்ள 4 தொழிற்சாலைகளில் நெக்கார்சல்ம் ஆலை ஒன்றாகும் என வோக்ஸ்வேகன் தலைமைச் செயல் அதிகாரி ஆலிவர் புளூம் எச்சரித்துள்ளார்.

நெக்கார்சல்ம் ஆலையில் தற்போது சுமார் 15,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு அவுடி A5, A6, A8 மற்றும் மின்சார காரான e-tron GT ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆலையை மூடினால் அப்பகுதியில் பெரும் பொருளாதாரப் பேரழிவு ஏற்படும் என்றும், பிற வர்த்தகங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அப்பகுதியின் மேயர் ஸ்டீபன் ஹெர்ட்விக் எச்சரித்துள்ளார்.

உயர் உற்பத்திச் செலவு, சீன நிறுவனங்களின் கடும் போட்டி மற்றும் அமெரிக்காவின் வரி விதிப்புகள் போன்ற காரணங்களால் ஜெர்மனியின் கார் உற்பத்தித்துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

அவுடி நிறுவனம் மட்டுமின்றி, பிஎம்டபிள்யூ, போர்ஷே மற்றும் மெர்சிடீஸ்-பென்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0