உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சீனாவிடம் இருந்து 400 ஏவுகணைகளைக் கொள்வனவு செய்யும் ஈரான்!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
111 பார்வைகள்

அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் தனது பாதுகாப்பை மீள் கட்டமைப்பு செய்து வரும் ஈரான், சீனாவில் தயாரிக்கப்பட்ட தோளில் வைத்து ஏவக்கூடிய 400 விமான ஏவுகணை செலுத்து அமைப்புகளை பெறவுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

அதன் முதல் தொகுதியை ஈரான் எதிர்வரும் சில வாரங்களில் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக நன்கு தகவல் அறிந்த வட்டாரங்களுடன் உறுதிப்படுத்தி ரொயிட்டர்ஸ் இந்த செய்தியை வௌியிட்டுள்ளது.

இராணுவத் தளங்கள் மற்றும் மூலோபாய உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் ஈரானின் திறனில் உள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்திய, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியதில் இருந்து, தனது குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதற்காக தெஹ்ரான் மேற்கொண்ட மிகப்பெரிய கொள்வனவதாக இது அமைந்துள்ளது.

இதற்காக ஈரான் 60-70 மில்லியன் டொலரை செலவிட்டு அதனை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஒப்பந்தமானது, சீனாவில் தயாரிக்கப்பட்ட QW-12 மற்றும் FN-16 ஏவுகணைகள் உட்பட 300 முதல் 400 வரையிலான மனிதர்களால் கையாளக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்புகளின் கொள்வனவை உள்ளடக்கியுள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், அந்த நிறுவனம் ஈரான் தரப்பிற்கும் சீன விநியோகத்தருக்கும் இடையில் ஒரு இடைத்தரகராகச் செயற்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஈரானின் வெளியுறவு அமைச்சு இது தொடர்பில் எவ்வித பதிலையும் வழங்கவில்லை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0