உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற தெய்வீக கிராம நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
134 பார்வைகள்

இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலக ஒழுங்கமைப்பில் மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகளின் இணையம் இணைந்து ஏற்பாடு செய்த தெய்வீக கிராம நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை (29) காலை மன்னார் நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் அ.தனுஜன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இன்று புதன்கிழமை (29) காலை மன்னார் பிரதான பாலத் தடியில் இருந்து மன்னார் நகர மண்டபம் வரை கலாச்சார பேரணி இடம்பெற்றது.

குறித்த பேரணியில் விருந்தினர்களாக சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் சைவத்திரு செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீப், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோர் உள்ளடங்களாக அறநெறி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும் சிறப்பு சொற்பொழிவு, சிவதாண்டவ நாடகம், கௌரவிப்பு நிகழ்வு, பண்ணிசை, நடனம்ஆகிய நிகழ்வுகள் இடம் பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0