உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சீன ரோபோக்களுக்கு அமெரிக்காவில் தடை!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
120 பார்வைகள்

அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், முக்கிய தொழில்களை உள்நாட்டிலேயே வளர்ப்பதை இலக்காகக் கொண்டும், புதிய சீன ரோபோக்கள் மற்றும் பவர் இன்வெர்ட்டர்களின் இறக்குமதியை ட்ரம்ப் நிர்வாகம் தடை செய்துள்ளது.

இதன்படி, புதிய மனித வடிவிலான மற்றும் நான்கு கால் ரோபோக்கள் அத்துடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்கலங்களை மின் கட்டமைப்புடன் இணைக்கும் இணைக்கப்பட்ட பவர் இன்வெர்ட்டர்களின் இறக்குமதியை மத்திய தொலைத்தொடர்பு ஆணைக்குழு தடை செய்துள்ளது.

இந்தச் சாதனங்கள் மூலம் தரவு திருட்டு, சைபர் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவின் முக்கிய உள்கட்டமைப்புகளுக்குச் சீர்குலைவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவினால், உலக அளவில் முன்னணியில் உள்ள சீன ரோபோ தயாரிப்பு நிறுவனமான ‘யூனிடிரி’ (Unitree) மற்றும் இன்வெர்ட்டர்கள் தயாரிக்கும் ‘சங்ரோ’ (Sungrow) மற்றும் ‘ஹ_வாவி’ (uawei) போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

140 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0