உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கலைக் கண்காட்சி ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
117 பார்வைகள்

மன்னாரின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் (National School) ஏற்பாட்டில், மாணவர்களின் மறைந்த மற்றும் வெளிப்படுத்தப்படாத பன்முகத் திறமைகளை வெளிக்கொணரும் “சவேரியன் முகிழூம் வெளி” எனும் விஷுவல் ஆர்ட்ஸ் (Visual Art Exhibition – 2026) கண்காட்சி இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை பாடசாலையின் ஜோசப் மண்டபத்தில் ஆரம்பமானது.

கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் ச. சாந்தியாகு (Rev.Bro.S. Santhiyagu Fsc) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் கிறிஸ்து நேசரத்தினம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஜி. ஆத்தவன், திருமதி. எஸ். சுதர்சினி மற்றும் கல்வி வலயத்தின் நடன ஆசியுரை திருமதி. எல். எஸ். ஏ. ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாணவர்களின் கற்பனைத்திறனுக்கு உயிர் கொடுக்கும் வகையில் ஓவியங்கள், சிற்பங்கள், மரச் செதுக்கல்கள் உள்ளிட்ட பல நுண்கலை ஆக்கங்கள் இக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான இந்த அற்புதமான கலைப் படைப்புகள் பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகின்றன.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக
செவ்வாய்க்கிழமை (28) காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை. புதன்கிழமை (29) காலை 8:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் திறமைகளை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தும் இக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDEC), பழைய மாணவர் சங்கம் (OBA) மற்றும் மாணவர்கள் இணைந்து மிகச் சிறப்பாக செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0