உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் பாலம் திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
159 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் 12ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

40மீற்றர் நீளமான குறித்த பாலம் திறந்து வைக்கப்பட்டு 06 வருடங்களின் பின்னர் மக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கடந்த ஆட்சியாளர்களினால் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா பெருந்தொற்று காரணமாகவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இடை நடுவே கைவிடப்பட்ட நிலையில் இருந்த குறித்த பாலமானது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விரைவான நடவடிக்கையின் மூலம் 206மில்லியன் ரூபா செலவில் குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தது.

இன்று 28.07.2026 வீதிகள் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களினால் உத்தியோபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு இணைப்பாளர் மருங்கன் மோகன், கண்டாவளை பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த பாலத்தின் அபிவிருத்தி நடவடிக்கையின் போது பல்வேறு இன்னல்களும் இரண்டு உயிர்கள் பறி போனதுடன் பலர் வீதி விபத்துகளையும் சந்தித்து வந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் துரித நடவடிக்கையின் மூலம் குறித்த காலத்தில் அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0