உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

“நேர்மையான கலாசாரம், தூய்மையான இலங்கை” தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
78 பார்வைகள்

“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி இன்று (28.07.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலிருந்தும், ஆளுநர் செயலகத்திலிருந்தும் சமநேரத்தில் ஆரம்பமாகியது.

இந் நடைபவனியில் – மாவட்ட செயலகத்திலிருந்து மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவைகள் மன்றத்தினர், பொலிஸ் மற்றும் முப்படையினரும், அதேவேளை கெளரவ ஆளுநர் செயகத்திலிருந்து ஆளுநர் செயலகம், பிரதம செயலாளர் செயலகம், மாகாண அமைச்சு மற்றும் மாகாண திணைக்கள உத்தியோகத்தர்களும் பங்குபற்றினார்கள்.

இவ் நடைபவனியில் வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பிரதிப் பிரதம செயலாளர், மாகாண அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு.எஸ் கபிலன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.

மேலும், இந் நடைபவனி மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆரம்பமாகி – வைத்தியசாலை வீதி ஊடாக வேம்படி சந்தியை அடைந்து, அங்கிருந்து முதலாம் குறுக்குத் தெரு வழியாக பிரதான வீதியைச் சென்றடைந்து, பஸ்ரியான் சந்தி மற்றும் கண்டி வீதி ஊடாக மீண்டும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் ஆளுநர் செயலகத்தை காலை 10.00 மணியளவில் வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

68 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

80 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

71 0 0