உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் – 1405 பேர் உயிரிழப்பு!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
136 பார்வைகள்

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் பாதிப்பு மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,200 ஆக அதிகரித்துள்ளதுடன்  1,405 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

அங்கு பரவி வரும் 17ஆவது எபோலா அலையைக் கட்டுப்படுத்த மருத்துவக் குழுவினர் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 1,000 பேருக்குப் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே 15 அன்று கண்டறியப்பட்ட இந்த எபோலா அலை, ‘புண்டிபுக்யோ’ என்ற வைரஸ் வகையால் ஏற்படுகிறது.

இந்த குறிப்பிட்ட வகை எபோலா வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இல்லை என்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட வழக்குகளில் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் அதிகமானவை தெற்கு சூடான் மற்றும் உகாண்டா எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள இடூரி மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வைரஸ் இதுவரை 5 மாகாணங்களுக்குப் பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைவதில் நிலவும் போக்குவரத்துச் சிக்கல்கள் மற்றும் மருத்துவ பரிசோதனைக்கான மாதிரிகளை எடுத்துச் செல்வதில் பெரும் சிரமங்கள் நிலவுகின்றன.

அத்துடன், ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து சில மருத்துவமனை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களும் தடுப்பு நடவடிக்கைகளைப் பாதித்துள்ளன.

இந்த எபோலா அலை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எபோலா ‘புண்டிபுக்யோ’ வைரஸைக் கட்டுப்படுத்த ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு சர்வதேச ஆய்வுக் குழுக்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஆக்சுஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள சோதனை அளவிலான புதிய தடுப்பூசி முதற்கட்டமாகச் தன்னார்வலர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

140 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0