உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனர்கள் பலி!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
61 பார்வைகள்

காஸாவின் பல பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 3 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலியப் படைகள் காசாவின் பல பகுதிகளில் நடத்திய ஆளில்லா வானூர்தி (Drone) தாக்குதல்களில் இருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இதன்படி, டேர் அல்-பலா (Deir al-Balah) பகுதிக்குத் தெற்கே உள்ள வாடி அல்-சல்கா (Wadi al-Salqa) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்ததுடன், வடக்கு காசாவின் ஜபலியா அல்-பலாத் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, அல்-கராரா (al-Qarara) பகுதியில் முன்னதாக நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில் படுகாயமடைந்த கான் யூனிஸ் பகுதியைச் சேர்ந்த மொஹமட் கலீல் மொஹமட் சலீம் (38) எனும் நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0