உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” – யாழ். மாவட்ட செயலகத்தில் சத்தியப் பிரமாண நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
92 பார்வைகள்

“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (27.07.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சத்தியப் பிரமாண நிகழ்வினைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உரையாற்றினார்.

அரசாங்க அதிபர் தமதுரையில், இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் தேசிய முன்னுரிமை செயற்பாடுகளாக Clean Sri Lanka, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய மூன்று முக்கிய திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இத் திட்டங்கள் குறித்து அனைவரும் நன்கு அறிந்தவர்கள் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டதுடன், அந்த வகையில், Clean Sri Lanka தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திலும் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக பல்வேறு செயற்பாடுகள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக அரச சேவைக்கான நேர்மைக் கலாச்சாரத்தை உருவாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. இது அனைவரின் ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய பொறுப்பாகும்.

ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை “கிளீன் ஸ்ரீலங்கா தேசிய நேர்மை வாரம்” என ஜனாதிபதி செயலகத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய நிகழ்வு அந்த நேர்மை வாரத்தின் முதலாவது நிகழ்வாகும்.

ஒவ்வொரு அமைச்சுக்கும் தனித்தனி தினங்கள் ஒதுக்கப்பட்டு, அவற்றின் பொறுப்புகளுக்கு அமைவாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், இன்று “சட்டத்தை மதிப்போம் – நேர்மைமிக்க அரச சேவை” என்ற தொனிப்பொருளில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்வு நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.

ஒரு அரச உத்தியோகத்தரிடம் இருக்க வேண்டிய நேர்மை, பொறுப்புணர்வு, கடமை உணர்வு மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவற்றை நாம் ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பொதுமக்களுக்கு திறமையான, வெளிப்படையான மற்றும் வினைத்திறன் மிக்க சேவையை வழங்குவது எமது அடிப்படைப் பொறுப்பாகும் எனவும், அரச சேவையின் திறன், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே ஊழலற்ற, பொறுப்புணர்வுமிக்க மற்றும் முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார். அதற்காக ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் தமது பணிப்பொறுப்புகளை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்ற வேண்டும்.

இன்று நாம் மேற்கொண்டுள்ள நேர்மை உறுதிமொழி ஒரு அரச சேவையாளர் எவ்வாறு தமது கடமைகளை உயர்ந்த ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் முன்னெடுக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது எனத் தெரிவித்தார்.

ஆதலால், மாவட்டத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லும் ஒவ்வொரு உத்தியோகத்தரும் தங்களது பணிகளை நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் மேற்கொண்டு, பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். அதுவே “நேர்மையான அரசு சேவை – தூய்மையான இலங்கை” என்ற இலக்கை அடைவதற்கான உறுதியான அடித்தளமாக அமையும் எனவும் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த நாட்டையும் உள்ளடக்கும் வகையில் “நேர்மையான கலாசாரம் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய நேர்மை வாரம் 2026 ஜுலை 27 ஆம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வெறுமனே ஒரு வாரத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நினைவு தின விழாவாக கருதாது அரச சேவையின் அடித்தளத்தை நிலையானதாக மாற்றியமைக்கும் குறுங்கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கான ஒரு அணுகுமுறையாக கருதி செயற்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

68 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

80 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

71 0 0