உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

சீனாவில் மரபணு திருத்தப் பரிசோதனையில் 6 வயது சிறுமி பலி!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
152 பார்வைகள்


சீனாவில் 6 வயது சிறுமி ஒருவருக்கு நடத்தப்பட்ட அபாயகரமான ‘மரபணு திருத்த’ (Gene-editing) மருத்துவ சோதனையின்போது அந்த சிறுமி உயிரிழந்த சம்பவமும், அந்த விடயத்தை விஞ்ஞானி ஒருவர் மூடிமறைத்த விவகாரமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூளை வளர்ச்சிக் குறைபாடுள்ள அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட ‘மேய்’ (புனைப்பெயர்) என்ற 6 வயது சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நரம்பியல் விஞ்ஞானி ‘ஜிலோங் கியூ’ தலைமையிலான குழுவினர் மரபணு திருத்த மருத்துவ சோதனையை மேற்கொண்டனர்.

இதற்காக சிறுமியின் பெற்றோரிடமிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணமும் பெறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, சிறுமியின் மூளையைச் சென்றடையும் வகையில் முதுகெலும்பு வழியாக ட்ரில்லியன் கணக்கிலான வைரஸ்கள் செலுத்தப்பட்டன.

ஆனால், சிகிச்சை அளிக்கப்பட்ட ஒரே வாரத்துக்குள் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சோதனையின் போது சிறுமி உயிரிழந்த போதிலும், அந்த ஆபத்தான உண்மையை விஞ்ஞானி ஜிலோங் கியூ மறைத்துள்ளார்.

மேலும், விலங்குகளில், தான் நடத்திய ஆய்வுகள் குறித்த கட்டுரையை ‘நேச்சர்’ (Nature) என்ற உலகின் புகழ்பெற்ற விஞ்ஞான இதழில் வெளியிட்டபோது, சிறுமி இறந்தமை பற்றி எந்தவொரு தகவலையும் அவர் குறிப்பிடவில்லை.

எனினும், ‘சயின்ஸ்’ மற்றும் ‘ரிட்ராக்ஷன் வோட்ச்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய கூட்டுப் புலனாய்வில் இந்த உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதன்படி, இந்த சோதனையில் உள்ள ஆபத்துகள் குறித்துச் சிறுமியின் பெற்றோருக்குச் சரியாக விளக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்துச் கருத்து தெரிவித்துள்ள ‘ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழக மருத்துவப் பீடம்’, “ஆராய்ச்சி நெறிமுறைகளை மீறி நடத்தப்படும் மருத்துவ சோதனைகளை ஏற்க முடியாது என்றும் இது குறித்து விரிவான விசாரணை நடத்தச் விசேட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

உயிரித் தொழில்நுட்பம் துறையில் வல்லரசாக உருவெடுக்க முயலும் சீனாவுக்கு, இந்தச் சம்பவம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்; ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை.!

உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசர சட்டத்தில் அமெரிக்க…

39 0 0
உலக செய்திகள்

ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா : போர்க் குற்றம் என ஐ.நா. சாடல்!

ஈரானில் கடந்த பெப்ரவரி மாதம் பாடசலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருந்ததாக நம்புவதற்குப் “போதுமான ஆதாரங்கள்” உள்ளன. அத்துடன்…

51 0 0
உலக செய்திகள்

ஜோஹன்னஸ்பேர்க்கில் தொடரும் கொ@லைகள் : 9 ஆவது பெண்ணின் சட@லமும் மீட்பு!

தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை…

37 0 0
உலக செய்திகள்

சுவீடன் பொதுத்தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சிக் கூட்டணி சிறிய வித்தியாசத்தில் வெற்றி

சுவீடன் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சித் கூட்டணி சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, தான் பதவியிலிருந்து விலகப் போவதாக நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்ட்சன்…

29 0 0