உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
123 பார்வைகள்

பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பதவியிலிருந்து அகற்றப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் நாட்டிற்கு வர ஆயத்தமாகி வருவதாக வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து ஜனாதிபதி இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2024ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டங்களின் போது நபர்களைப் படுகொ*லை செய்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவ்வழக்குகளை எதிர்கொள்வதற்காகத் தான் மீண்டும் பங்களாதேஷிற்கு வருகை தரவுள்ளதாக ஹசீனா வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்து சில நாட்களுக்குப் பின்னரே ஜனாதிபதியின் இந்த இராஜினாமா தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

மருத்துவ சிகிச்சைக்காக தாய்லாந்து சென்றுள்ள நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தீன் அகமட் திரும்பி வந்த பின்னர், ஜனாதிபதி தனது ராஜினாமாக் கடிதத்தைக் கையளிக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

140 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0