உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் நீதிமன்ற அனுமதியுடன் எரிக்கப்பட்ட கேரளா கஞ்சா.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
155 பார்வைகள்

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் – மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் இன்றையதினம் 600 கிலோ எடையுடைய கேரளா கஞ்சாவானது எரித்தழிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில் அது குறித்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்து, அந்த வழக்குகள் நிறைவடைந்த நிலையில் குறித்த கஞ்சா பொதிகள் இன்றையதினம் எரிக்கப்பட்டன.

இதன்போது நீதிவான், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் போதைத்தடுப்பு பொலிஸார், பொலிஸார், கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் முன்னிலையில் இந்த கஞ்சா பொதிகள் எரிக்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

68 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

80 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

71 0 0