உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுங்கள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
153 பார்வைகள்

எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீன்பிடிப் படகுகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டாவது கட்டுப்படுத்துங்கள் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் கடற்படையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து எமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முற்று முழுதாக அழித்துவிட்டு செல்கின்றனர்.

இந்திய மீனவர்களின் இத்தகைய செயற்பாடு பல வருடங்களாக இடம்பெற்றுவரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த இந்திய அரசும் தமிழக அரசும் தவறிவிட்டது.

இந்திய தமிழக புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்றதன் பின் அதிகளவிலான இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் தீவகக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய சட்டவிரோத மீனவர்கள் எமது மீனவர்கள் கடலில் வீசியிருந்த பல கோடி பெறுமதியான வலைகளை அறுத்து நாசம் செய்தனர்.

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான வருகை எமது மீனவர்களை வாழ்வாதார ரீதியாக பாதிப்பது மட்டுமல்லாது மீனவ தொழிலில் இருந்து வேறு தொழில்களுக்கு செல்லவும் நிர்ப்பந்தித்துள்ளது .

இலங்கை கடற்படையிடம் வினையமாக கேட்கிறோம் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது அவர்களின் வருகையை கட்டுப்படுத்துங்கள்.

எங்களால் இனியும் பொறுமை காக்க முடியாது நாட்டின் ஜனாதிபதியையும் துறைசார் அமைச்சரையும் சந்தித்து எமது கோரிக்கையை தெளிவாக கூற இருக்கிறோம்.

சட்டத்தை நாங்கள் கையில் எடுக்க விரும்பவில்லை ஆகவே இறையுள்ள எமது கடற்பகுதியை பாதுகாக்கும் அதிகாரமும் கடமையும் கடற்படையிடம் உள்ள நிலையில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கட்டுப்படுத்துங்கள் நாங்கள் பக்க பலமாக இருப்போம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

68 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

80 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

71 0 0