உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கையில் இடம்பெற்ற அநீதிக்கு சர்வதேச விசாரணை மட்டுமே தீர்வு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
105 பார்வைகள்

இலங்கை அரசாங்கமானது ஒருபோதும் இலங்கையில் நடந்த அநீதிக்கு தீர்வினை வழங்காது. ஒரு சர்வதேச நீதிப் பொறிமுறை மூலமே இதற்கு தீர்வு கிட்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் கண்ணதாசன் சுடரோன் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் சித்துப்பாத்தி இந்து மயானத்துக்கு அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த உள்ளகப் பொறிமுறை மூலம் இற்றைவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை. இங்கே செயற்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோரது அலுவலகம் சரி, அரசாங்கத்தின் நீதிப் பொறிமுறைகள் சரி வெறும் தரவுகளை அறிக்கையிடும் வகையிலேயே அமைகிறது.

அரசாங்கத்தின் இயந்திரமாக செயல்படும் நீதித்துறையினால் எமது பிரச்சினைகளுக்கான தீர்வினை ஒருபோதும் பெற்றுக் கொடுக்க முடியாது. ஒரு முறையான சர்வதேச பொறிமுறை ஊடாகவே எம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான தீர்வு கிடைக்க முடியும்.

2010ஆம் ஆண்டு நீக்கப்பட்ட GSP+ வரிச் சலுகை மீண்டும் 2017ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதன்போது பயங்கரவாத தடைச் சட்டமானது நீக்கப்பட வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு வரை மக்களை அடக்குகின்ற பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட விடயங்கள் நீக்கப்படவில்லை.

இது இவ்வாறு இருக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தினர் இங்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களை சரியாக சந்திக்காமல் செல்வது ஒரு கண்துடைப்பு விடயமாகவே பார்க்கப்படுகிறது. அந்தவகையில் நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை கேட்பது யாதெனில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட அநீதியை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தட்டிக் கேட்காது. எனவே இதற்கு முறையான ஒரு சர்வதேச பொறிமுறை செயற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

68 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

80 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

71 0 0