உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
25 சனி

புதிய கட்சியின் பெயரையும் கொடியையும் அண்ணாமலை விரைவில் அறிவிக்க உள்ளதாகத் தகவல்

இந்திய செய்திகள் 18 மணி நேரம் முன்
81 பார்வைகள்

புதிய கட்சியின் பெயர், கொடியை அண்ணாமலை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி தேர்தல் பிரசாரத்தில் பெரிய அளவில் அண்ணாமலை தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இந்தநிலையில், கடந்த மாதம் பா.ஜனதாவில் இருந்து அண்ணாமலை விலகினார்.

தான் ஏற்கனவே நடத்தி வந்த ‘வீ த லீடர்ஸ்’ என்ற அமைப்பை அரசியல் களத்தில் இறக்கினார். ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையும் நடத்தினார். முதல் நாளில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். தொடர்ந்து முகாம் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

இதற்கிடையே, பொள்ளாச்சியில் கடந்த 12 ஆம் திகதி அண்ணாமலை நடத்திய மாநாட்டில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர்.

அதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் 2 ஆவது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்க அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார்.

இதற்கான பணிகளில் அவர் முழு வீச்சில் இறங்கியுள்ளார். வரும் ஆகஸ்டு 3 ஆவது வாரத்தில் புதிய கட்சியின் பெயரை அண்ணாமலை அறிவிக்க உள்ளார். புதிய கொடியையும் அவர் அறிமுகம் செய்கிறார்.

கட்சியின் பெயர், கொடி அறிமுகத்தை தொடர்ந்து செப்டம்பர் 14 ஆம் திகதி மதுரை அல்லது திருச்சியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தவும் அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார். கட்சியின் பெயர் அறிவிப்பு கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டங்கள் வரும் வாரங்களில் நடத்தப்பட இருக்கிறது.

இதற்காக தமிழகம் முழுவதும் ‘வீ த லீடர்ஸ்’ குழுவினர் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கும் வகையில் அண்ணாமலை புதிய கட்சி தொடக்கம் அமைய இருக்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

மெளனப் போராட்டத்தில் குதித்தார் அண்ணா ஹசாரே!

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே மராட்டிய மாநிலத்தில் உள்ள தனது சொந்த…

64 0 0
இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்துக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆலியா பட் ஆதரவு!

இந்தியாவின், டெல்லி – ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்…

73 0 0
இந்திய செய்திகள்

உணவு தவிர்ப்புப் போராட்டத்தைக் கைவிட்டார் சோனம் வாங்சுக்

இந்தியாவில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், தனது போராட்டத்தை நேற்று நள்ளிரவு நிறைவு செய்தார். இந்தியாவில் பரவலாக…

72 0 0
இந்திய செய்திகள்

‘நீட்’ விவகாரத்துக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்வு – பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

நீட் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள அமைச்சுரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவொன்று எடுக்கப்படவுள்ளதுடன், பரீட்சை முறையை மாற்றியமைப்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக இந்தியப் பிரதமர்…

82 0 0