உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

‘நீட்’ விவகாரத்துக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்வு – பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

இந்திய செய்திகள் 2 மாதங்கள் முன்
138 பார்வைகள்

நீட் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள அமைச்சுரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவொன்று எடுக்கப்படவுள்ளதுடன், பரீட்சை முறையை மாற்றியமைப்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நீட் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், பல்வேறு அரசியல் அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்திலும் இந்தக் கோரிக்கை தொடர்பான எதிர்ப்புகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில் ,

நமது இளைஞர்களின் நலனையும் எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை.

வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

மேலும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நள்ளிரவில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர்,

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பரீட்சை முறையை சீரமைப்பது தொடர்பாகவும், மாணவர்களின் நலன் சார்ந்த மேலதிக நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட்டு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

43 0 0