உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
24 வெள்ளி

ராகுல் காந்தி கைதுக்கு தமிழக முதல்வர் விஜய் கண்டனம்!

இந்திய செய்திகள் 17 மணி நேரம் முன்
24 பார்வைகள்


புது டெல்லியில் இடம்பெற்ற நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்துப் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், மத்திய அரசின் இச்செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தவெக தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக விஜய் அறிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என்பதே தவெக-வின் சமரசமற்ற நிலைப்பாடு எனவும் மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதிக்கும் இந்த முறையை வைத்துப் பொய் வாக்குறுதிகளை அளித்து வாக்கு அரசியல் செய்ய மாட்டோம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

நீட் போன்ற தேர்வுகள் ஒழிக்கப்பட வேண்டுமெனில், கல்வியை உடனடியாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் இதுவே ஒரே நிரந்தரத் தீர்வாகும். எனவும் இதில் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை ‘சிறப்புப் பொதுப் பட்டியல்’ (Special Concurrent list) ஒன்றை உருவாக்கி, கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்டவற்றில் மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே தங்களது பார்வை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்.!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் நேற்று புதன்கிழமை(22) மாலை கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 06 ஆம்…

26 0 0
இந்திய செய்திகள்

மீண்டும் சூடுபிடித்த இந்திய இளைஞர் போராட்டம்!

இந்தியக் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி புது டெல்லியில் நடைபெற்ற இளைஞர் போராட்டத்தின்போது, காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. நேற்று (22) பிற்பகல்…

32 0 0
இந்திய செய்திகள்

நீட் சர்ச்சை வெடித்த நிலையில் பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு!

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இளைஞர்களின் எதிர்காலத்தின் முக்கியத்துவத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…

26 0 0
இந்திய செய்திகள்

தமிழக முதல்வர் விஜய்க்கு நீதிமன்றம் புதிய அறிவித்தல்!

பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக தலைவர் மற்றும் முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்குப் புதிய அறிவித்தலை அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

82 0 0