உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

கர்நாடகாவில் தவளைகளுக்குத் திருமணம் – மழையை வேண்டி வினோத வழிபாடு!

இந்திய செய்திகள் 2 மாதங்கள் முன்
88 பார்வைகள்

இந்தியாவின் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளதுடன் விவசாயப் பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குடிநீருக்காகப் பெண்கள் தினமும் பல கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டுவரும் நிலை தொடர்வதோடு, மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதுடன் கால்நடைகளும் சந்தித்து வருகின்றன.

இந்தநிலையில், ஊரில் நல்ல மழை பெய்து வறட்சி நீங்க வேண்டும் என்ற நோக்கில் அந்த பகுதி பெண்கள் பாரம்பரிய நம்பிக்கையின்படி வினோத வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு தவளைகளைப் பிடித்து வந்து, அவற்றுக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் திருமணம் செய்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடும் பிரார்த்தனையும் மேற்கொண்டனர்.

இது குறித்து அந்த பகுதி பெண்கள் கூறுகையில், “வறட்சி காலங்களில் தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது முன்னோர்களிடம் இருந்து வந்த நம்பிக்கையாகும்.

தற்போது கடும் நீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும் இந்த வழிபாட்டை நடத்தினோம்” எனத் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

28 0 0
இந்திய செய்திகள்

பாரதிதாசனுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி-யின் பதிவு

கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களின் நோக்கத்தையே…

57 0 0
இந்திய செய்திகள்

இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

வர்த்தகம், போக்குவரத்து மற்றும் அங்கீகரிக்கப்படாத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு குறித்த இந்தியா-நேபாள அரசுகளுக்கு இடையிலான துணைக்குழுவின் (IGSC) கூட்டம் செப்டம்பர் 16-17 ஆகிய திகதிகளில் புது டெல்லியில்…

53 0 0
இந்திய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் இரு தீவிரவாதிகளை அழித்ததாக இந்திய இராணுவம் அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவத்தினால் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உதம்பூர் மாவட்டத்தில் உள்ள மஜால்டா பகுதியின் பிரட்டல் சோஹன் மற்றும் குப்பன் ஆகிய பகுதிகளில் ஜெய்ஷ்…

42 0 0