உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

இந்தியாவில் நீர்மின் திட்டச் சுரங்கத்தில் வெடிப்பு : 10 பேர் உயிரிழப்பு

இந்திய செய்திகள் 2 மாதங்கள் முன்
76 பார்வைகள்

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள நீர்மின் திட்டச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 15க்கும் மேற்பட்டோர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிக்கிம் மாநிலத்தின் அமைந்துள்ள தீஸ்தா கட்டம்-VI (Teesta Stage-VI) நீர்மின் திட்டத்தின் சுரங்கப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுரங்கத்துக்குள், பாறைகளுக்கு இடையில் தேங்கியிருந்த மீத்தேன் வாயு திடீரென வெளியேறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து ஏற்பட்ட போது, திட்டப் பணிகளுடன் தொடர்புடைய பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் சுரங்கத்திற்குள் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், சுரங்கத்திற்குள் காணப்படும் நச்சு வாயுக்கள், அதிகளவிலான புகை மற்றும் அந்த பகுதியில் நிலவும் கடும் மழை காரணமாக மீட்புப் பணிகளுக்கு சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

பாரதிதாசனுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி-யின் பதிவு

கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களின் நோக்கத்தையே…

56 0 0
இந்திய செய்திகள்

இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

வர்த்தகம், போக்குவரத்து மற்றும் அங்கீகரிக்கப்படாத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு குறித்த இந்தியா-நேபாள அரசுகளுக்கு இடையிலான துணைக்குழுவின் (IGSC) கூட்டம் செப்டம்பர் 16-17 ஆகிய திகதிகளில் புது டெல்லியில்…

52 0 0
இந்திய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் இரு தீவிரவாதிகளை அழித்ததாக இந்திய இராணுவம் அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவத்தினால் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உதம்பூர் மாவட்டத்தில் உள்ள மஜால்டா பகுதியின் பிரட்டல் சோஹன் மற்றும் குப்பன் ஆகிய பகுதிகளில் ஜெய்ஷ்…

41 0 0
இந்திய செய்திகள்

திமுகவின் முப்பெரும் விழா எதிர்வரும் 19-ம் திகதி நடைபெறவுள்ளது

வரும் 19-ம் திகதி அன்று திமுக முப்பெரும் விழா அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக…

51 0 0