உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் வெற்றி.!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
27 பார்வைகள்

அண்மைக்காலமாக பிராந்தியத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் இன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலில் கல்முனை மாநகர சபையின் பூரண ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதன்போது நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய தேவையற்ற பாத்திரங்கள், பழைய டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகள், தேங்காய் ஓடுகள், மழைநீர் தேங்கக்கூடிய ஏனைய பொருட்கள் ஆகியன தீவிரமாகச் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டன.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும். எனவே, வாரத்திற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது ஒதுக்கி, தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும், நீர் தேங்கும் இடங்களை உடனுக்குடன் அகற்றி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் சுகாதாரப் பிரிவினர் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டுமொரு போர் ஏற்படாது! – ஐரோப்பியத் தூதுக்குழுவினரிடம் வடக்கு ஆளுநர் திட்டவட்டம்

“இலங்கையில் போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை தோல்வியடையும் – அமைச்சரவைப் பேச்சாளர் உறுதி!

நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல்…

14 0 0
இலங்கை செய்திகள்

விவசாயம் முதல் சுகாதாரம் வரை சகல துறைகளிலும் அரசு படுதோல்வி! – சஜித் விமர்சனம்!!

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தற்போதைய அரசு தொடர்ந்தும் தவறி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விவசாயத்…

11 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் வல்லிபுரம் பகுதியில் தீ பரவல்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரகோவிலை  அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதிக்கு தெற்கு பகுதியில் விஷமிகளால் மூட்டப்பட்ட தீயினால் வயல் வேலிகள், புற்தரைக்கள், பனை மரங்கள் என்பன…

87 0 0