உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

குட்டிமணி, தங்கத்துரை சிலை திறப்பு விழா; ஏற்பாட்டாளர் கந்தசாமி சதீஸ் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
143 பார்வைகள்

வெலிக்கடை சிறைக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த கந்தசாமி சதீஸ், நேற்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையில் எதிர்வரும் 25 ஆம் திகதி மேற்படி உருவச்சிலைகளைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வந்தன. இதன்போது, ஏற்பாட்டுக் குழுவில் ஒருவரான வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் கந்தசாமி சதீஸ், பொலிஸாரால் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார். தொடர்ந்து, விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்ய முற்பட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் அவர், பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை நீதிவான் பிணையில் விடுவித்து நாளை புதன்கிழமை வரை வழக்கை ஒத்திவைத்தார். அதேவேளை, நாளை வரை உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாடுகளுக்கும் நீதிவான் தடை விதித்தார்.

1983 ஆம் ஆண்டு ஜூலை வன்முறையின் போது, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்துரை மற்றும் குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளால் படுகொலை செய்யப்பட்டமை இலங்கை வரலாற்றில் ஒரு கறுப்புப் பக்கமாகும். இந்த வரலாற்று நிகழ்வை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் சிலை திறப்பு விழா ஏற்பாடுகளால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தென்மராட்சியில் சோகம்; கோர விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உ**யிரிழப்பு.!

யாழ்ப்பாணம் – தென்மராட்சிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் உந்துருளியில் பயணித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மீசாலை – புத்தூர்…

54 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரிப்பு.!

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். நுவரெலியா லவர்ஸ்லீப் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,…

44 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

59 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

70 0 0