உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தாக்குதலுக்கு மத்தியிலும் மறைமுக இராஜதந்திரப் பேச்சுகள் தொடர்வதாக ஈரான் அறிவிப்பு!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
159 பார்வைகள்

அமெரிக்கா நடத்திய சமீபத்திய இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியிலும், மத்தியஸ்தர்கள் மூலமாக அமெரிக்காவுடனான மறைமுக இராஜதந்திரப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பகேய் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மத்தியஸ்தர்கள் மூலம் செய்திகள் பரிமாறப்பட்டு வருவதாகவும், கடந்த சில நாட்களில் இராஜதந்திர முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு சில யோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போர் மற்றும் இராஜதந்திரம் ஆகிய இரண்டையும் ஈரான் தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான கருவிகளாகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் முற்றிலும் முறிந்துவிடவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0