உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

டெங்கு மரணங்களுக்கு அரசே பொறுப்புக்கூற வேண்டும் – மொட்டுக் கட்சி சாடல்!

80 பார்வைகள்

நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ள போதிலும், அரசு அதனைத் தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காது, அரசியல் பிரசாரங்களிலேயே கவனம் செலுத்தி வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்  சட்டத்தரணி சாகர காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த வருடத்தில் இதுவரை 53 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று கூட 16 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அரசின் ‘ க்ளீன் ஶ்ரீலங்கா’ திட்டம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. இதில் வீதிப் பயனாளிகளின் வாகனங்களைச் சோதனையிடுவதும், அரச நிறுவனங்களுக்குள் தமது ஆதரவாளர்களை உள்வாங்குவதுமே நடக்கிறதே தவிர, நாடு சுத்தப்படுத்தப்படவில்லை.

இவ்வாறான அலட்சியப்போக்கினால் நிகழும் ஒவ்வொரு மரணத்திற்கும் அரசே பொறுப்புக்கூற வேண்டும்.” – என்றார்.

நாட்டில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மர்ம மரணங்கள் குறித்து கடும் சந்தேகத்தை வெளியிட்ட அவர், சில உயிரிழப்புகள் தற்கொலை என முன்னரே அறிவிக்கப்படுவது விந்தையாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

“323 கொள்கலன் திருட்டு விவகாரத்தில் முறைப்பாடு செய்த நபர், நந்தன குணதிலக, கபில சந்திரசேன, திறைசேரி அதிகாரி மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் எனப் பலர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து செய்தி வருவதற்கு முன்பே, அது தற்கொலை எனப் பொலிஸ் அதிகாரி ஒருவர் அறிவித்தமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

அரசுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் மர்மமாக இறப்பதும், பின்னர் அவை தற்கொலை எனப் பிரச்சாரம் செய்யப்படுவதும் ஜனநாயகத்துக்குப் பொருத்தமற்றது.” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசு டெங்கு மற்றும் கோவிட் நோயைக் கட்டுப்படுத்திய அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளைப் பெறாது, தனது அகந்தையுடன் செயற்படுகின்றது என்று  தெரிவித்த சாகர காரியவசம், இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு அரசு ஏன் இவ்வளவு தீவிரமாக முயற்சிக்கின்றது என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதும் என்றும் கூறினார்.

அரசியல் நிகழ்ச்சி நிரல்களைத் தள்ளிவிட்டு, மக்களின் உயிரைக் காக்க அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டுமொரு போர் ஏற்படாது! – ஐரோப்பியத் தூதுக்குழுவினரிடம் வடக்கு ஆளுநர் திட்டவட்டம்

“இலங்கையில் போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை தோல்வியடையும் – அமைச்சரவைப் பேச்சாளர் உறுதி!

நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல்…

14 0 0
இலங்கை செய்திகள்

விவசாயம் முதல் சுகாதாரம் வரை சகல துறைகளிலும் அரசு படுதோல்வி! – சஜித் விமர்சனம்!!

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தற்போதைய அரசு தொடர்ந்தும் தவறி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விவசாயத்…

12 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் வல்லிபுரம் பகுதியில் தீ பரவல்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரகோவிலை  அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதிக்கு தெற்கு பகுதியில் விஷமிகளால் மூட்டப்பட்ட தீயினால் வயல் வேலிகள், புற்தரைக்கள், பனை மரங்கள் என்பன…

87 0 0