உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஜோர்தானில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
101 பார்வைகள்

ஜோர்தானின் அக்கபா சர்வதேச வானூர்தி நிலையம் மற்றும் துறைமுகப் பகுதிகளில் “குறிப்பிட்ட மற்றும் நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல்” இருப்பதாகக் கூறி, தமது நாட்டுப் பிரஜைகளை, அந்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், குறிப்பிட்ட நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அக்கபா வானூர்தி நிலையத்திலும் துறைமுகத்திலும் இருந்த மக்களை ஜோர்தான் அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், ஜோர்தானில் உள்ள இராணுவத் தளங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்ட ஆலோசனையை தூதரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, ஜோர்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரண்டு அமெரிக்க இராணுவத்தினர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0