உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் 10 குளங்களை முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
144 பார்வைகள்

அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ( ‘வாரி மஹிம’ ) மன்னார் மாவட்டத்தில் 10 குளங்கள் முழுமையாக, விரைவாக புனரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. அந்த வகையில் இன்றைய தினம் (18) அதற்கான பூர்வாங்க நடவடிக்கையாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து குறித்த குளங்களை பார்வையிட்டனர்.

இதன்போது பொறியியலாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர்கள், குளங்களைச் சேர்ந்த கமக்காரர் அமைப்புகள், பிரஜாசக்தி தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

மன்னார் மாவட்டத்தில் முதலாவதாக மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் இருக்கும் அலிகண்டல் குளத்தை பார்வையிட்டனர்.

இந்தக் குளத்தை முழுமையாக புனரமைப்பு செய்வதன் ஊடாக, விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் தொடர்ச்சியாகப் பயிர்ச்செய்கையை சரியான முறையில் நடத்துவதற்குரிய வாய்ப்புக் கிட்டும். இக்குளம் ஏற்கனவே ‘டித்வா’ புயலின் காரணமாக முழுமையாக பாதிப்படைந்திருக்கின்றது. எனவே முழுமையாக இது புனரமைப்பு செய்யப்பட இருக்கிறது.

திங்கட்கிழமை மேலும் ஆறு குளங்களை பார்வையிட்டு, விரைவாக அந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளது. இந்த வருடத்தின் பெரும் போகத்திற்கு முற்பகுதியில் இந்தக் குளங்கள் முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டு, விவசாயிகளின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தினுடைய விசேடமான செயல்திட்டமாக இந்த விவசாய குளங்கள் புனரமைத்து விவசாயிகளுக்குக் கொடுப்பதன் ஊடாக, நெல் உற்பத்தியை அதிகரித்து இலங்கையில் காணப்படுகின்ற நெல்லினுடைய தட்டுப்பாடு மற்றும் நெல் உற்பத்தி சார் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதற்காக இந்தத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

63 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

65 0 0