உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நவீன வசதியுடன் மாடு அறுக்கும் மடுவம் புனரமைக்கப்பட்டு கையளிப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
203 பார்வைகள்

மன்னார் நகரசபையினால் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் கோந்தை பிட்டி பகுதியில் உள்ள மாடு அறுக்கும் மடுவம் நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (18) காலை பயன்பாட்டிற்காக வைபவ ரீதியாக திறந்து விடப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் குறித்த மாடு அறுக்கும் மடுவத்தை திறந்து கையளித்தார்.

கடந்த காலங்களில் குறித்த மாடு அறுக்கும் மடுவத்தில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்பட்டு வந்த நிலையில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டதாக நகர சபைக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக குறித்த மாடு அறுக்கும் மடுவத்தில் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்ட நிலையில் சீல் வைத்து மூடப்பட்டது.

இந்த நிலையில் மன்னார் நகரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மாடுகளை நிலத்தில் போட்டு வெட்டாது நவீன முறையில் செயினில் கொழுவி சுத்தமான முறையில் வெட்டும் வகையில் குறித்த மடுவம் புனரமைக்கப்பட்ட நிலையில் வைபவ ரீதியாக இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகரசபை பிரிவிலுள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்ற மாடுகள் குறித்த மடுவத்தில் சுகாதார பரிசோதகர்கள் கண்காணிப்பில் உரிய அனுமதி பெறப்பட்ட நிலையில் அறுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

64 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

65 0 0